நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
நூல் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், நாட்டின் ஜவுளி வணிகத்தில் மூன்றில் ஒரு பங்கை தமிழ்நாடு உள்ளடக்கியுள்ளதாகவும், நூல் விலை கடுமையாக அதிகரித்துள்ளதால் ஆடை ஏற்றுமதிக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்தாவிட்டால், பல நிறுவனங்கள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்படுவதுடன் வேலை இழப்புகளும் பெரியளவில் ஏற்படும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பருத்திக்கு விதிக்கப்படும் 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும், பருத்தி கொள்முதல் காலங்களான டிசம்பர் முதல் மார்ச் வரை 5 சதவீத வட்டி மானியத்தை நூற்பாலைகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.
Comments