தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட உடன், தமிழக விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தென்னாபிரிக்காவில் ஒமிக்ரான் வைரஸ் கண்டறியப்பட்ட உடன், தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் மரபணு பகுபாய்வு மையத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக உலக சுகாதாரம் நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருவதாக குறிப்பிட்டார்.
மேலும், 2 மாதங்களுக்கு முன் டி.எம்.எஸ். வளாகத்தில் அமைக்கப்பட்ட மரபணு ஆய்வகத்தில், 469 மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 95 சதவீதம் டெல்டா வரைஸ் என கண்டறியப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
Comments