மகாராஷ்டிராவில் முதியோர் இல்லத்தில் 67 பேருக்கு கொரோனா தொற்று

0 3444

மகாராஷ்டிரா மாநிலத்தில் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 67பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Bhiwandi பகுதியில் செயல்பட்டு வந்த அந்த முதியோர் இல்லத்தில், சிலருக்கு லேசான உடல் பாதிப்பு இருந்ததை அடுத்து கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

இதில், கொரோனா உறுதியானதால், அங்கிருந்த அனைவருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 5 ஊழியர்கள் உட்பட முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 67 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து, அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 59 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments