தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் கட்டாயம்? ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - மகாராஷ்டிரா அரசு
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, தென்னாப்பிரிக்காவில் இருந்து வரும் பயணிகளை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்துதலில் வைக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்டா வைரஸை விட அதிக வீரியமிக்கதாக ஒமிக்ரான் வைரஸ் இருக்கும் என கூறப்படும் நிலையில், இது குறித்து ஆலோசனை நடத்திய மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் இருந்து நேரடியாகவோ அல்லது அந்த நாடுகளின் வழியாகவோ மகாராஷ்டிரா வருவோருக்கு 7 நாட்கள் தனிமைப்படுத்துதலை கட்டாயமாக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்று கட்டாயம் எனவும் அறிவிக்கவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments