ஒமிக்ரான் வைரஸ் - இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்
ஒமிக்ரான் வைரஸ் குறித்த முன்னெச்சரிக்கையால் 12 நாடுகளின் விமான சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கான புதிய வழிகாட்டல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தங்கள் RT-PCR பரிசோதனை அறிக்கையை ஏர் சுவிதா Air Suvidha எனப்படும் இணையத்தில் பயணத்துக்கு முன்பாக பதிவேற்ற வேண்டும்.
நெகட்டிவாக இருக்கும்பட்சத்தில் ஏழு நாட்கள் அவர்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.எட்டாவது நாளில் மீண்டும் பரிசோதித்து நெகட்டிவாக வந்தால் இன்னும் ஒரு ஏழு நாட்கள் தங்களை தாங்களே கண்காணிக்க வேண்டும்.
இது போன்ற மேலும் சில கட்டுப்பாடுகள், விமானநிலைய பரிசோதனைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆபத்து மிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு ஆளாகக் கூடும்.
Comments