ஒமிக்ரான் குறித்த தகவல்களை அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டும் ; டெல்லி எய்ம்ஸ் தலைவர் ரந்தீப் குலேரியா
புதிய கொரோனா வேரியன்டான ஒமிக்ரான் வைரஸ் குறித்து நமக்கு கிடைத்துள்ள பல தகவல்களையும் அறிவியல்பூர்வமாக நிரூபிக்க வேண்டிய தேவை உள்ளது என டெல்லி எய்ம்ஸ் தலைவர் Dr. ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரான் வைரஸ் தனது ஸ்பைக் புரோட்டீன் பகுதியில் 30க்கும் அதிகமான உருமாற்றங்களை பெற்றுள்ளது பற்றி குறிப்பிட்ட அவர், ஸ்பைக் புரோட்டீனில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு வேரியன்டின் தொற்றும் திறனை நிச்சயிப்பதுடன், நோய் எதிர்ப்புத் திறனில் இருந்து தப்புவதும் அதை பொறுத்தே இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான தடுப்பூசிகள் ஸ்பைக் புரோட்டீனுக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை உருவாக்கி அதன் மூலம் பாதுகாப்பு அளிப்பவை ஆகும். ஒமிக்ரானை பொறுத்தவரை ஸ்பைக் புரோட்டீனில் பல மரபணு மாற்றங்களை எடுத்துள்ளதால், இப்போதுள்ள தடுப்பூசிகள் பெரிய அளவுக்கு பாதுகாப்பை தரும் என கூறமுடியாது என ரந்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
Comments