கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

0 7984
டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் காலமானார்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த புகழ்பெற்ற நடன இயக்குனரும், குணச்சித்திர நடிகருமான சிவசங்கர் மாஸ்டர் காலமானார். அவருக்கு வயது 72. தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்.

நடிகர்கள் விஜய், அஜீத், தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராகவும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் சிவசங்கர் மாஸ்டர் நடித்திருந்தார்.

அஜித்துக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திய வரலாறு திரைப்படத்தில் அவருடைய பரதநாட்டிய கதாப்பாத்திரத்துக்கு நளினம் கற்றுக்கொடுத்தவர் சிவசங்கர் மாஸ்டர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அண்மையில், ஹைதராபாத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிவசங்கர் மாஸ்டர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments