கருமை நிறமாக காட்சியளிக்கும் மெரினா ; ஆறுகளில் வந்த கழிவுநீர் கடலில் கலந்ததே காரணம் என ஆய்வாளர்கள் கருத்து

0 4172
கருமை நிறமாக காட்சியளிக்கும் மெரினா

கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகியவற்றின் வெள்ளம் கடலில் பாய்ந்து வரும் நிலையில் சென்னையில் கடல் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்தே சென்னையில் உள்ள கொசஸ்தலை, கூவம், அடையாறு ஆகியவற்றின் வழியே மழைவெள்ளத்துடன் கழிவுநீரும் கடலில் பாய்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக ஆறுகளில் இருந்து கடலில் பாயும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

மெரினாவியின் வடபகுதியில் கூவம் ஆறும், தென்பகுதியில் அடையாறும் கடலில் கலக்கின்றன. பொதுவாக நீலநிறமாகக் காணப்படும் மெரினாக் கடற்கரையையொட்டிய கடற்பரப்பு இப்போது கருநிறமாகக் காட்சியளிக்கிறது.

ஆற்றில் ஏற்கெனவே தேங்கி இருந்த கழிவுகளுடன், மழைநீருடன் வந்த கழிவுகளும் வெள்ளத்தால் அரித்து வரப்பட்டுக் கடலில் கலப்பதே கடல் கருநிறமாகத் தோற்றமளிக்கக் காரணம் என்றும், மூன்று நாட்களுக்குள் கடல் மீண்டும் இயல்பு நிறத்துக்குத் திரும்பி விடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments