கனமழை எதிரொலி ; குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் வெள்ளம்
தென்காசி மாவட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் ஆர்ப்பரித்து வெள்ளம் பாய்கிறது.
பேரருவியில் பாதுகாப்பு வளைவே தெரியாத அளவுக்குப் புதுவெள்ளம் பாய்வதால் நடைபாதைகள், நடைமேம்பாலம் ஆகியவற்றிலும் தண்ணீர் செல்கிறது. பெருமளவு வெள்ளம் பாய்வதால் அருவியில் இருந்து பல கிளைகளாகப் பிரிந்து நடைபாதைகள், படிக்கட்டுகள், குற்றாலநாதர் கோவில் கடைவீதிகள் ஆகியவற்றிலும் தண்ணீர் செல்கிறது.
கொரோனா சூழலில் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை உள்ளது குறிப்பிடத் தக்கது.
Comments