கேரளம், மகாராஷ்டிரத்தில் இருந்து கர்நாடகத்துக்குச் செல்லக் கொரோனா சான்றிதழ் கட்டாயம்
கேரள, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து கர்நாடகத்துக்கு வருவோர் தடுப்பூசி போட்டிருந்தாலும் கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து உலக நாடுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தியுள்ளன.
அதன் ஒரு பகுதியாகக் கர்நாடக அரசும் கேரள, மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வருவோர் முந்தைய 3 நாளுக்குள் சோதனை செய்து கொரோனா இல்லை எனச் சான்று பெற்றிருப்பது கட்டாயம் என அறிவித்துள்ளது.
கடந்த 15 நாட்களில் கேரளத்தில் இருந்து வந்துள்ள மாணவர்கள் கட்டாயம் கொரோனா சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
Comments