ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்.! நாட்டின் எல்லையை முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு

0 4150

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தங்கள் நாட்டின் எல்லையை 2 வாரங்களுக்கு முழுவதுமாக மூடுவதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் அந்த புதிய வகை உருமாற்றம் பெற்ற வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைக்கு நவம்பர் 26ஆம் தேதிக்கு இஸ்ரேல் தடை விதித்தது.

இந்நிலையில் அந்நாட்டில் ஒருவருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, வெளிநாட்டினர் இஸ்ரேலுக்குள் நுழைய இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாகவும், தொற்று பாதித்தோரின் தொடர்புகளை கண்டறியும் வகையில் பயங்கரவாத எதிர்ப்பு தொலைபேசி கண்காணிப்பு தொழில்நுட்பத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதாகவும் பிரதமர் நஃப்தலி பென்னெட் அறிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments