மதுராந்தகம் ஏரியின் அவசரக்கால மதகுகள் வழியே 2300 கன அடி நீர் திறப்பு
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியின் அவசரக்கால மதகுகளையும் திறந்து 29 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மதுராந்தகம் ஏரி நிரம்பியதில் இருந்தே அதன் கலிங்கு வழியாகவும், 110 தானியங்கி ஷட்டர்கள் வழியாகவும் உபரிநீர் வெளியேறி வருகிறது. வெள்ளியன்று பெய்த கனமழையால் நீர்வரத்து இருபதாயிரம் கன அடிக்கு மேல் அதிகரித்து ஏரியின் மேற்கே உள்ள ஊர்கள், விளைநிலங்களில் நீர் தேங்கியது.
அதிக அளவு நீர்திறக்க அவசரக்கால மதகுகளைத் திறக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று இன்று அவசரக் கால மதகுகள் வழியாக 2300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தானியங்கி ஷட்டர்கள், கலிங்கு வழியாக 27 ஆயிரத்து 200 கனஅடி நீர் வெளியேறுகிறது. உபரிநீர் கிளியாற்றில் செல்வதால் ஆற்றின் கரையோரமுள்ள 21 ஊர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments