தமிழ்நாட்டில் 12ஆவது முறையாக 50,000 இடங்களில் மாபெரும் தடுப்பூசி முகாம்கள்

0 2909

தமிழ்நாட்டில் 12ஆவது மாபெரும் தடுப்பூசி முகாம் 50ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், பொது இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நவம்பர் இறுதிக்குள் அனைவருக்கும் ஒரு தவணை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை எட்டும் வகையில் கடந்த வியாழனன்றும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

இன்றைய தடுப்பூசி முகாம்களின் பயன்பாட்டுக்கு ஒரு கோடியே 32 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாலை 7 மணி வரை முகாம்கள் செயல்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments