டாஸ்மாக்கில் மது வாங்க தடுப்பூசி கட்டாயம் - அமைச்சர்
டாஸ்மாக்கில் மதுபானம் வாங்குவோர் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம் என தெரிவித்துள்ள அமைச்சர் மா.சுப்ரமணியன், உலகளவில் புதிய வகை உருமாறிய வைரஸ் பரவும் நிலையில், விமான நிலையங்களில் பரிசோதனையும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சென்னை அடையாறில் மெகா தடுப்பூசி முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், பொன்முடி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த மா.சுப்ரமணியன், தென் ஆப்பிரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையத்தில் உள்ள மருத்துவக்குழு பரிசோதனை செய்வதாகவும் அவர்களில் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
Comments