இங்கிலாந்தில் வீசிய கடும் புயலால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவிப்பு

0 3260

இங்கிலாந்தில் வீசிய கடும் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

வடக்கு அயர்லாந்தில் அர்வன் என பெயரிடப்பட்ட புயல் நேற்று கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 100 மைல் வேகத்தில் காற்றும் பனிப்புயலும் சேர்ந்து தாக்கியது. இதனால் ஏராளமான மரங்கள் விழுந்தன. பெரிய லாரி ஒன்றும் விழ நேரிட்டது.

புயல் காரணமாக கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மரம் விழுந்ததிலும், பனியில் சிக்கியும் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மின்சாரம் தடைபட்டதால் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் இருளில் தவிக்கின்றனர். சாலைகளில் விழுந்த கிடக்கும் மரங்களை காவல்துறையினர் அகற்றி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments