தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு !
தென் ஆப்பிரிக்காவிலிருந்து பெங்களூரு வந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய பெங்களூரு புறநகர் துணை ஆணையர் கே.ஸ்ரீனிவாஸ், அதிக ஆபத்துள்ளதாகக் கருதப்படும் ஒமிக்ரான் தொற்று பரவியுள்ள 10 நாடுகளில் இருந்து இதுவரை 584 பேர் வந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
அதில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு கெம்பேகவுடா விமானநிலையத்திற்கு வந்த 94 பேரில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கே.ஸ்ரீனிவாஸ், அது உருமாறிய டெல்டா தொற்று என்றும், அவர்கள் இருவரும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Comments