மழைக்கால நிவாரணப் பணிகளில் நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன்... முதலமைச்சர் உறுதி!

0 3198

மழைக்கால நிவாரணப் பணிகளில் இரவு பகல் பாராது களத்தில் பணியாற்றி வரும் அரசு அதிகாரிகள் ,மக்கள் பிரதிநிதிகளுடன் தாமும் களத்தில் நிற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக ஊடகம் வழியாக வெளியிட்ட அறிக்கையில் சென்னையில், கடந்த 200 ஆண்டுகளில் ஒரே மாதத்தில் 1000 மில்லிமீட்டர் மழை பதிவாவது இது நான்காவது முறை என்கிறார்கள் வானிலை வல்லுநர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இத்தகைய கடும் மழைப் பொழிவிலும் உயிர்ப்பலிகளைத் தடுத்து; முடிந்தவரை உடைமைச்சேதங்களைக் குறைத்து; பாதிப்புகள் விரைந்து சரிசெய்யப்பட்டு; நிலைமை கட்டுக்குள் இருப்பதை உறுதிசெய்துள்ளதாக கூறியுள்ளார்.

இதற்கு முழுமுதற்காரணம், ஓய்வுறக்கமின்றி நாள் முழுதும் கொட்டும் மழையில் பணியாற்றி வரும் மாநகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளிட்ட அனைத்துத் துறை அதிகாரிகள்தான் என்றும், அவர்களுக்கு எத்தனை நன்றி கூறினாலும் போதாது என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நாட்களுக்கும் மிக அதிக மழை தொடரும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் அனைவரும் நேரம், காலம் பார்க்காது களத்திலேயே இருந்து பணியினைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். முதலமைச்சராகிய நானும் களத்தில் நிற்கிறேன்; நிற்பேன் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments