வெள்ளம் சூழ்ந்த அரசு பொது மருத்துவமனை.. நோயாளிகள் ஆம்புலன்ஸ் மூலம் வேறு மருத்துவமனைக்கு மாற்றம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள செய்யூர் அரசு பொது மருத்துவமனையில் மழைநீர் புகுந்ததால் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மழைநீரை வெளியேற்றும் பணியில் அரசுத்துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுவருகின்றனர். இதேப்போன்று, மதுராந்தகம் அருகே உள்ள தண்டரைப்பேட்டை கிராமம், மடுகில் ஏற்பட்ட வெள்ளத்தில் தனியார் நிறுவன பணிக்கு பெண்களை அழைத்துச் சென்று சிக்கி கொண்ட மகேந்திரா வேனை, அப்பகுதி பொதுமக்கள் டிராக்டர் மூலம் மீட்டனர்.
Comments