விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்றினால் ரூ.5,000 பரிசு.! நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை, உரிய நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து உதவி செய்வோருக்கு, 5 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும், என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விபத்தில் சிக்குவோருக்கு, அவசரகால உதவி கிடைக்க வேண்டும் என்பதே, இத்திட்டத்தின் நோக்கம் என்றும், ஒரு ஆண்டில் அதிகபட்சம் ஒரு நபருக்கு, 5 முறை பரிசுத் தொகை வழங்கப்படும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடைபெற்ற இடத்தை, காவல்துறையினர் பார்வையிட்டு, மருத்துவமனைக்கு தகவல் அளிப்பர். அதன் பேரில், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு ஆய்வு செய்து, பரிசு வழங்க, போக்குவரத்து ஆணையருக்கு பரிந்துரைக்கும், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments