சபரிமலை வரும் சிறார்களுக்கு RT-PCR சோதனை கட்டாயமில்லை - கேரள அரசு

0 10679

நடப்பு மண்டலபூஜை, மகரவிளக்கு சீசனில் சபரிமலைக்கு வரும் சிறார்கள் RT-PCR  சோதனை செய்ய வேண்டியதில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது.

அதே நேரம் சிறார்களை அழைத்து வரும் பெற்றோரோ அல்லது இதர உறவினர்களோ, சோப், சானிடைசர், முகக்கவசம் ஆகியவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும் எனவும் சிறார்கள் போதிய சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட RT-PCR  நெகடிவ் சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments