பஞ்சாபில் ஒப்பந்த ஆசிரியர்கள் தண்ணீர்த் தொட்டியில் நின்று கீழே குதிக்கப்போவதாக மிரட்டல்.. வேண்டுகோள் விடுத்த டெல்லி முதலமைச்சர்

0 2389

பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் சிலர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிநின்று கீழே குதிக்கப் போவதாக மிரட்டிய நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவர்கள் கீழிறங்கினர்.

பஞ்சாபில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களைப் பணி வரன்முறைப்படுத்தக் கோரி மொகாலியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலும் போராட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது தண்ணீர்த் தொட்டியில் ஏறி நின்று மிரட்டியவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments