எலான் மஸ்கின் Starlink Internet Services நிறுவனத்திற்கு உரிமம் இல்லை, பொதுமக்கள் முன்பதிவு செய்ய வேண்டாம் - தொலைத்தொடர்பு அமைச்சகம்

0 6136

எலான் மஸ்கின் Starlink Internet Services நிறுவனத்திற்கு இணையசேவை வழங்குவதற்கான உரிமம் வழங்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அந்த இணைப்பை வாங்க முன்வரவேண்டாம் என தொலைத்தொடர்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

Starlink Internet Services நிறுவனம் நேரடி சாட்டிலைட் இணைய இணைப்பை வழங்குவதாக கூறி அதற்கான முன்பதிவை தனது தளத்தில் செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி பலர் அதற்கான முன்பதிவை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது போன்ற சாட்டிலைட் இணைய இணைப்பை வழங்குவதற்கான உரிமம் எதையும் இந்த நிறுவனம் கோரவில்லை என தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உரிமம் வழங்கப்படாத நிலையில் அதற்கான முன்பதிவை நடத்தக்கூடாது என்றும், அப்படி ஒரு சேவையை வழங்க வேண்டுமானால் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் Starlink Internet Services நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தொலைத் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments