16 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கிவிட்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறிவிட்டு தப்பிச் சென்ற பட்டதாரி பெண்!

0 62197

புதுச்சேரியில் துணிக்கடைகளில் 16 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கிவிட்டு கூகுள் பே மூலம் பணம் செலுத்துவதாக கூறி கடைக்காரர்களை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற பட்டதாரி பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

காந்தி நகர் வழுதாவூர் சாலையில் தணிகாசலம் என்பவர் நடத்தி வரும் துணிக்கடையில் 8 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கிய அந்த பெண், கூகுள் பே மூலம் பணத்தை செலுத்துவது போல நடித்து கடைக்காரரை ஏமாற்றிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். திலாசுப்பேட்டை பகுதியில் உள்ள துணிக்கடையிலும் இதே போல 8 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கிவிட்டு பணத்தை அனுப்பாமல் கடைக்காரரை ஏமாற்றியுள்ளார்.

இது தொடர்பாக துணிக்கடைகளின் உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்த நிலையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த பி.டெக் பட்டதாரியான அனுசியா என்ற அந்த பெண்ணை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments