ஸ்பெயினில் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தென்பட்டது

0 14547

ஸ்பெயினில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய 5 கிராமங்கள் நீர் வற்றியதால் மீண்டும் தோன்றியுள்ளன.

லிமியா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் நீர் மின் நிலையம், அணையின் மதகுகளை 1992 ஆம் ஆண்டில் மூடியதால் நீர் தேங்கி Ourense மாகாணத்தின் Aceredo உள்ளிட்ட 5 கிராமங்கள் நீரில் மூழ்கின. இந்த கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற அரசு உத்தரவிட்ட நிலையில், வாழ்விடத்தை விட்டு வெளியேற முடியாது என கிராமவாசிகள் போர்க்கொடி தூக்கினர்.

அவர்களது முயற்சி பலனளிக்காத நிலையில் இருப்பிடத்தை காலி செய்து விட்டு சென்றனர். இந்நிலையில்,  மீண்டும் தோன்றிய கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ள நிலையில், சுவர்கள் அப்படியே இருப்பதால் பேய்கள் நடமாடும் பகுதி போல காட்சியளிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments