பெருவில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய "மம்மி" கண்டுபிடிப்பு

0 6279

பெரு நாட்டில் சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன்பு பதப்படுத்தப்பட்ட மனித உடல், தொல்லியல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, லிமா நகருக்கு அருகே, கஜமர்குயில்லா என்னுமிடத்தில், பூமிக்கடியில் வட்ட வடிவில் காணப்பட்ட அறைக்குள், இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் கை, கால்கள் கயிறுகளால் கட்டப்பட்டு, அமர்ந்த நிலையில் காணப்பட்டது. அதன் அருகே, உணவுப் பொருட்கள் மற்றும் பானைகளும் கிடைத்துள்ளன. சக்லா மலைப் பகுதியில் வாழ்ந்த ஆதிகால மக்களிடைய, இவ்வாறு இறந்தவர்களின் உடல்களை பதப்படுத்தி வைக்கும் வழக்கம், நடைமுறையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது கிடைத்துள்ள மனித உடலின், துல்லியமான காலத்தை அறிந்திடும் வகையில், ரேடியோ கார்பன் முறையில் பரிசோதிக்க, தொல்லியல் ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments