புதிய வகை கொரோனா இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கலாம் - எய்ம்ஸ்
புதிய வகை கொரோனா பரவி வரும் சூழ்நிலையில் இரண்டு தடுப்பூசி போட்டவர்களையும் அது தாக்கலாம் என்பதால் பூஸ்டர் டோஸ் செலுத்துவதை வேகப்படுத்துமாறு மத்திய அரசுக்கு ஏய்ம்ஸ் மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களில் 40 முதல் 93 சதவீதப் பேருக்கு இந்த வகை கொரோனாவில் இருந்து பாதுகாப்பு அதிகரித்துள்ளதாக இஸ்ரேலில் நடைபெற்ற ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் நேற்று ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில் ஏய்ம்ஸ் மருத்துமனையின் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் நவ்நீத் விக் பூஸ்டர் டோஸ்களை உடனடியாக வேகப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
Comments