சமையல் சிலிண்டர் வெடித்து 6 பேர் பலியான சம்பவம்: நேரில் சென்று ஆறுதல் கூறிய எதிர்க்கட்சித் தலைவர்

0 4171

சேலம் கருங்கல்பட்டி பகுதியில் 6 பேரை பலி வாங்கிய சிலிண்டர் வெடிவிபத்து நிகழ்ந்த பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

இந்த விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்து, 6 பேர் பலியாகி, 12 பேர் காயமடைந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த 12 பேரையும் நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.

எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தும்போது பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், வீடுகளை இழந்தோருக்கு அரசு உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments