மரபணு மாற்ற கொரோனா வைரசானது தடுப்பூசி பாதுகாப்பை தாண்டியும் பரவக்கூடும் ; டெல்லி எய்ம்ஸ் நிபுணர்

0 6950
மரபணு மாற்ற கொரோனா வைரசானது தடுப்பூசி பாதுகாப்பை தாண்டியும் பரவக்கூடும்

இஸ்ரேல் மற்றும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள B.1.1.529 மரபணு மாற்ற கொரோனா வைரசானது தடுப்பூசி பாதுகாப்பை தாண்டியும் பரவக்கூடும் என டெல்லி எய்ம்ஸ் நிபுணர் Dr. சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார்.

உடலில் ஏற்கனவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி தொற்றலாம் என்பதால் இந்த மரபணுமாற்ற வைரஸ் கவலை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது என அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேலில் இந்த வைரசின் பரவல் உறுதியானதை தொடர்ந்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இந்த மரபணு மாற்ற வைரஸ் பல வகையான மாற்றங்களை எடுத்துள்ளதால், அதன் தன்மை குறித்து புரிய பல வாரங்கள் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments