நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு பணிக்குழுவை உருவாக்கியது தென் கொரிய அரசு

0 3392
நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு பணிக்குழுவை உருவாக்கியது தென் கொரிய அரசு

தென் கொரியாவில் பல நூற்றாண்டுகளாக மக்களால் நாய் கறி உண்ணப்பட்டு வரும் நிலையில், நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து முடிவெடுக்க சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தென் கொரியாவில் சுமார் 10 லட்சம் நாய்கள் மாமிசத்துக்காக கொல்லப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சர்வதேச அரங்கில் தென் கொரியாவுக்கு ஏற்படும் சங்கடத்தை தவிர்க்க நாய் மாமிசத்தை தடை செய்வது குறித்து பொதுமக்கள், நாய் மாமிச வியாபரிகள், உணவக உரிமையாளர்களின் கருத்துக்களை கேட்க அதிபர் Moon Jae-in முடிவு செய்துள்ளார்.

அதிபரின் இந்த முடிவுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்துள்ள நிலையில், எதை சாப்பிட வேண்டும் என்ற மக்களின் உரிமையை அரசு பறிப்பதாக மற்றொரு தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments