அலுவல் முறைப் பயணமாக டெல்லிக்கு வருகிறார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் ஆறாம் நாள் அலுவல் முறைப் பயணமாக டெல்லிக்கு வரவுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அன்றைய நாளில் இந்திய - ரஷ்ய ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் விளாடிமிர் புதினும் பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜீ லவ்ரோவ், பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜீ சோய்கு ஆகியோர் டிசம்பர் ஐந்தாம் நாள் டெல்லிக்கு வருவதாகவும் அவர் கூறினார். அவர்கள் இருவரும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பேச்சு நடத்த உள்ளதாகவும் அரிந்தம் பக்சி தெரிவித்தார்.
Comments