உதம்பூர் - துர்க் விரைவு ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு ; பயணிகள் கீழிறக்கி விடப்பட்டதால் உயிர்சேதம் தவிர்ப்பு

0 2544
உதம்பூர் - துர்க் விரைவு ரயிலில் தீ பற்றியதால் பரபரப்பு

மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டம் ஹேதாம்பூரில் உதம்பூர் - துர்க் விரைவு ரயிலின் 2 குளிர்வசதிப் பெட்டிகள் தீப்பற்றி எரிந்தன.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அந்தப் பெட்டிகளில் இருந்த பயணிகள் அனைவரும் கீழிறிங்கியதால் உயிர்தப்பினர். தீப்பிடித்த பெட்டிகள் தனியாகக் கழற்றிவிடப்பட்டதால் மற்ற பெட்டிகளுக்குத் தீப் பரவாமல் தடுக்கப்பட்டதாக வடக்கு மத்திய ரயில்வே மண்டலச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்த தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments