ஊழியரைத் தாக்கியதாக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அரசினர் விருந்தினர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக ஊழியரைத் தாக்கியதாக சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடேசன் என்ற அந்த ஊழியர் தன்னைப் பற்றி முகநூலில் தவறாகப் பதிவிட்டதாகக் கூறி தளவாய்சுந்தரம் தாக்கியதாகவும் அவருடன் வந்தவர்களும் நடேசனைத் தாக்கியதாகவும் போலீசில் புகாரளிக்கப்பட்டது.
சம்பவத்தின்போது, நடேசனின் மனைவியும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் அவரது கழுத்திலிருந்த தங்கத் தாலியை பறித்துச் சென்றுவிட்டதாகவும் அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments