கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்படுவதை வரவேற்கிறோம் ; முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

0 4002
கலைஞர் உணவகங்கள் கொண்டுவரப்படுவதை வரவேற்கிறோம்

கலைஞர் உணவகங்கள் தொடங்கப்படுவதை வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம் என்றும் அம்மா உணவகங்களை மறைக்காமல் கலைஞர் உணவகங்கள் செயல்படுத்த வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து வரும் கட்சி என்பதால், தங்களை எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொள்கின்றனர் என்றும் மக்களின் பேராதரவோடு தமிழகத்தில் எதிர்க் கட்சியாக அதிமுக தான் உள்ளது என்றும் செல்லூர் ராஜு கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments