திடீரென 25 அடி உயரத்துக்கு மேலேழுந்த உறைகிணறு ; பீதியடைந்த மக்கள்
திருப்பதியில் கனமழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், அங்குள்ள ஒரு வீட்டில் பூமிக்கடியில் இருந்து 25 அடி ஆழமுள்ள உறைகிணறு ஒன்று திடீரென மேலெழும்பியதைப் பார்த்து அப்பகுதியினர் பீதியில் ஆழ்ந்தனர்.
கடற்கரை அருகிலும் மணற்பாங்கான பகுதிகளிலும் பக்கவாட்டில் இருந்து மண் சரிவைத் தடுக்க, சுடுமண்ணாலான வளையங்களைக் கொண்டு அமைக்கப்படும் கிணறுகள் உறைகிணறுகள் என்றழைக்கப்படுகின்றன.
திருப்பதி சுற்றுவட்டாரத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், ஸ்ரீகிருஷ்ணா நகரிலுள்ள ஒரு வீட்டில் உறைகிணறு ஒன்று திடீரென சுமார் 25 அடி உயரத்துக்கு மேலெழும்பி இருக்கிறது. இதனைப் பார்த்து அந்த வீட்டின் பெண் உரிமையாளர் பயந்துபோய் கூச்சலிட்டிருக்கிறார்.
அந்த கிணறு அமைந்திருக்கும் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன் சிற்றோடை சென்றதாகவும் அதன் மீதுதான் தற்போது வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தற்போதுவரை உயிரோட்டத்துடன் உள்ள அந்த சிற்றோடையில் கனமழை காரணமாக நீரோட்டம் ஏற்பட்டு, மண் தளர்ந்து வளையங்கள் மேலே வந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
Comments