தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானாவில் புதிய வகை கொரோனா - WHO அவசர ஆலோசனை!
தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா நாடுகளில் புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட நிலையில், உலக சுகாதார அமைப்பு இன்று அவசரமாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பெருகும்போது அதன் ஸ்பைக் புரதங்களில் ஏதேனும் மாறுபாடுகள் ஏற்பட்டால் அது உருமாற்றம் பெற்ற வைரஸ் என அழைக்கப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் திடீரென தொற்றுப் பரவல் அதிகரித்த நிலையில், அங்கு B.1.1.529 என்ற புதிய வகை உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா வைரஸ், முந்தைய வைரஸ்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு உள்ளதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த உயிரி தகவலியல் துறை பேராசிரியர் ஒருவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 நாடுகளுக்கு இடையிலான விமானப் போக்குவரத்திற்கு பிரிட்டன் தற்காலிகமாக தடை விதித்த நிலையில் இஸ்ரேலும் 7 ஆப்பிரிக்க நாடுகளுடனான விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது.
Comments