இந்தியா - மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியா - மியான்மர் நாடுகளின் எல்லைப்பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.1 என்ற அளவில் பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது. வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து 183 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்பகுதியில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த நிலையில், பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என கூறப்படுகிறது.
Comments