தமிழகத்திற்கு இன்று சிகப்பு நிற எச்சரிக்கை! இந்திய வானிலை ஆய்வு மையம்

0 11434

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தமிழ்நாட்டிற்கு அதிகனமழைக்கான சிகப்பு நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியினால், தமிழக கடலோரப் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து வரும் காற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் இன்று கனமழை முதல் மிக கனமழைக்கும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை தமிழகத்தில் கன முதல் மிக கனமழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments