தென் கொரிய தொடர் ஸ்குவிட் கேமை ரகசியமாக கசியவிட்ட நபருக்கு மரண தண்டனை
வட கொரியாவில் நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியான தென் கொரிய தொடர் ஸ்குவிட் கேமை ரகசியமாக கசியவிட்ட நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து வந்த அந்த நபர் USB ட்ரைவில் அந்த தொடரின் நகல்களை விற்றதாக கூறப்படுகிறது. நகலை அவரிடம் இருந்து வாங்கிய ஒரு பள்ளி மாணவருக்கு ஆயுள் தண்டனையும், மேலும் 6 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கலாச்சார சீரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக வட கொரியா கருதுவதால் பிற நாடுகளின் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைபடங்களுக்கு தடை உள்ளது.
Comments