நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ; இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் அரைசதம் அடித்தார்.
இதேபோல் ஸ்ரேயஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது. ரவீந்திர ஜடேஜா 50 ரன்களும், ஸ்ரேயஸ் ஐயர் 75 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
Comments