லஞ்ச ஊழல் வழக்கில் சிக்கிய சார்பதிவாளர் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
லஞ்ச ஒழிப்பு வழக்கில் சிக்கிய சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் கோபாலகிருஷ்ணன் மீதான துறை ரீதியான விசாரணையை விரைந்து முடிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அங்கு பணியாற்றிய கோபால கிருஷ்ணன், தூத்துக்குடிக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.
ஆனால் அவர், மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதால் அதுசம்பந்தமான உத்தரவை ரத்து செய்யக் கோரி, கருப்பு எழுத்து இயக்கம் வழக்கு தொடர்ந்தது.
Comments