கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.70-க்கு விற்கப்படும் தக்காளி
வரத்து அதிகரிப்பால் சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை 140 ரூபாயில் இருந்து 70 ரூபாயாக குறைந்தது.
சாதாரண நாட்களில் கோயம்பேடு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 80 லாரிகளில் தக்காளி கொண்டுவரப்பட்ட நிலையில், கன மழை தொடங்கிய பிறகு விளைச்சல் பாதிக்கபட்டாதால் , நேற்றுவரை 30 லாரிகளில் மட்டுமே வந்தன. இந்நிலையில் இன்று ஆந்திரா, கர்நாடகா, மாகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கூடுதலாக 30 லாரிகளில் தக்காளி வந்து இறங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது.
இதற்கிடையே ,நாளை மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதை அறிந்த சில வியாபாரிகள், 15 கிலோ அடங்கிய தக்காளி பெட்டியை கிலோ 40 ரூபாய் வீதம் 600 ரூபாய்க்கு வேக வேகமாய் விற்பனை செய்து வருகின்றனர்.
Comments