சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் மோசடி செய்து தலைமறைவான பெண்.. கொரோனா தடுப்பூசியால் சிக்கிய ருசிகர சம்பவம்..
சென்னையில் சீட்டு மோசடியில் ஈடுபட்டு தப்பியோடி, 2 ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்த பெண் கொரோனா தடுப்பூசி போடும் போது கொடுத்த ஆதார் அடையாளம் மூலம் மாட்டிக்கொண்டார்.
கொடுங்கையூர் காந்திநகர் பகுதியை சேர்ந்த சசிகலா மற்றும் ஈஸ்வரி ஆகிய 2 பேர் சேர்ந்து பலரிடம் சீட்டு நடத்தி 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டது.
ஈஸ்வரியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்த நிலையில், தலைமறைவான சசிகலாவை 2 ஆண்டுகளாக தேடி வந்தனர்.
இந்நிலையில், சசிகலா கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் என்ற அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், சுகாதாரத்துறை உதவியுடன் தேடியதில், காஞ்சிபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் சசிகலா தடுப்பூசி போட்டுக் கொண்டது தெரியவந்தது.
உடனடியாக தனிப்படை மூலம் அங்கு தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் சசிகலாவை கைது செய்தனர்.
Comments