"தடுப்பூசியால் தான் கமலுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை" - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான், நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா பாதிப்பு பெரியளவில் இல்லை, என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கிய பின், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இவ்வாறு தெரிவித்தார். மேலும், தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கை குறைவாக உள்ள நாடுகளில், கொரோனாவுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை, அதிகமாக உள்ளது என்றும், அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில், கடந்த 60 நாட்களாக, கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், நேற்று உயர்ந்துள்ளது என குறிப்பிட்ட அவர், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்த முன்வர வேண்டும், என்றும் வலியுறுத்தினார்.
Comments