மதரீதியான பாகுபாடுகளுக்கு எதிரான மசோதா... ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல்!
மதரீதியான பாகுபாடுகளுக்கு எதிரான மசோதா, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அரசியல், மத அமைப்புகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை, மத ரீதியான கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், அதே நேரத்தில் பிறரை புண்படுத்தும் வகையில், கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையிலும், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் மத சுதந்திரத்தை பேணுவது என்பது, ஆக்சிஜனை போன்றது என்று, இந்த மசோதா மீது பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்தார்.
இதன் மீது அடுத்த வாரம், நாடாளுமன்ற மேல் சபையில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அடுத்தாண்டு மே மாதம் அல்லது அதற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்படுவது, அந்நாட்டில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
Comments