பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி 700 கைதிகள் விடுதலை - அரசாணை வெளியீடு
பேரறிஞர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை ஒட்டி, நல்லெண்ண அடிப்படையில் 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி, உரிய சட்ட விதிகளுக்கு உட்பட்டு அண்ணா பிறந்தநாளை ஒட்டி, நீண்ட காலம் சிறைவாசம் அனுபவித்து வரும் ஆயுள் தண்டனை கைதிகள், நல்லெண்ண மற்றும் மனிதாபிமான அடிப்படையிலும், கைதிகளின் நன்னடத்தை அடிப்படையிலும் முன்னதாகவே விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தீவிரவாதம், பாலியல் வன்கொடுமை, மத, ஜாதி ரீதியான மோதல், அரசுக்கு எதிராக செயல்பாடு, சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி உள்ளிட்ட 17 குற்றங்களில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இவற்றை முறையாக ஆய்வு செய்து 700 ஆயுள் தண்டனை கைதிகளை அடையாளம் கண்டறிந்து அரசுக்கு அறிக்கை அளிக்க குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments