ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 விழுக்காட்டினர் உள்ளூர்வாசிகள் எனத் தகவல்!

0 2884

ஜம்மு காஷ்மீரில் நடப்பாண்டில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 86 விழுக்காட்டினர் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த ஆய்வின் முடிவில், பாதுகாப்புப் படையினருடனான மோதலில் 127 உள்ளூர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 21 வெளிநாட்டுத் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டில் இதுவரை 129 காஷ்மீரிக்கள் பயங்கரவாதிகளுடன் இணைந்திருப்பதாகவும், இது கவலை தரும் விஷயம் என்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள்-பயங்கரவாத வலையமைப்பைப் பயன்படுத்தி ட்ரோன்கள் மூலம் ஆயுதங்கள் பஞ்சாபிற்கு கடத்தப்படுவது தொடர்கிறது என்றும் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments