5ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த சேதியூரில் 5-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
பாடம் குறித்து கேட்ட கேள்விக்கு மாணவி சரியாக பதில் அளிக்கவில்லை எனக் கூறி கண்டிப்பது போல் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து அறிந்த மாணவியின் தாய் ஆசிரியரை அடித்த நிலையில் அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்த போலீசார் தலைமறைவாக இருந்த ஆசிரியர் அசோக்குமாரை கைது செய்தனர்.
Comments