கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம்!
கொரோனாவுக்கு எதிரான ஒற்றை டோஸ் தடுப்பூசியான ரஷ்யாவின் ஸ்புட்னிக் லைட் அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.
இதுகுறித்து பேசிய ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியத்தின் தலைமைச் செயல் அதிகாரி கிரில் ட்மிட்ரிவ், ஸ்புட்னிக் லைட் மருந்துக்கு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் கடந்த செப்டம்பர் மாதம் 3ம் கட்ட சோதனைகளை நடத்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்திற்கு அனுமதியளித்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
இந்த மருந்து ரஷ்ய தடுப்பூசியான ஸ்புட்னிக் வி இன் முதல் பாகமாகக் கருதப்படுகிறது. மேலும் இந்த மருந்தின் 2வது டோஸ் செலுத்திய 6 முதல் 8 மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக 80 விழுக்காடு பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்கிறது.
Comments