ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இன்று முதல் இயக்கம்
இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில் நான்காவது ஸ்கார்பியன் வகை நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் வேலாவை இன்று மும்பையில் கடற்படை இயக்க உள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மும்பையில் உள்ள வேலா நீர்மூழ்கி கப்பல் மத்திய அரசுக்குச் சொந்தமான கப்பல் தயாரிப்பு நிறுவனமான மசகான் டாக் லிமிடெட் என்ற நிறுவனம் கட்டமைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் 6 நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கப்பட உள்ளன.
இந்தக் கப்பலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் சென்சார் செயலிகள் கொரோனா தொற்று காரணமாக பெரிய துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனனர்.
Comments