தமிழகத்தில் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கன மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கன மற்றும் அதிகனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், வங்கக் கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Comments